அம்மாவாசை - பௌர்ணமி
நாம் இருக்கும் உலகம் மூன்று பரிமாணங்களை(dimensions) கொண்டது. சூரியன் நடுவில் நிலைகொண்டு உள்ளதாக நாம் கருதி கொண்டால், பூமி அதை நீள்வட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டுரெயில் அது வட்ட பாதையில் சுலல்வதாக எடுத்து கொள்ளுவோம். அதே போல் நிலவும் பூமியை வட்ட பாதையில் சுற்றுவதாக எடுத்து கொள்ளுவோம்.
பூமி தன்னை தானே சுற்றியும் வருகிறது. அதற்கு வொரு நாள் ஆகிறது. (24 மணிநேரம்) இதுவே பகல் - இரவு வருவதற்கான காரணம். சூரியனை நோக்கி உள்ள பகுதி பகலாகவும் அதை விட்டு தள்ளி உள்ள பகுதி இரவாகவும் அதை நாம் அறிகிறோம். சூரியனை விட்டு விலகி இறக்கும் பகுதி ஏன் இருட்டாக இருக்கிறது ? வெளிச்சம் நேர் கோட்டில் செல்வதால், பூமியின் பகல் பகுதி சூரியனின் வெளிச்சத்தை மறித்து விடுகிறது. அதலால் இரவானது பூமியின் நிழல் ஆகும். எந்த வொரு சமயத்திலும் பூமியில் பகலும் இரவும் இரண்டும் இறுக்கும். எந்த இடத்தில எது என்பது தான் மாறும்.
பூமியை போலவே நிலவிலும் பகல் இரவு உண்டு. ஆனால் அது 27 நாட்கள் நீடிக்கிறது, அதாவது தன்னை தான் சுற்றிவர நிலவுக்கு 27 நாட்கள் ஆகிறது. அதாவது நிலவின் வொரு பகலும் வொரு இரவும் பூமியின் 27 இரவு-பகல் ஆகும். நிலவின் நடு மதியானத்தை நாம் பவுர்ணமி என்கிறோம். நிலவின் நடு இரவை நாம் அம்மவசை என்கிறோம். சற்று பொறுங்கள், இப்பொழுதுதான் நாம் பூமியில் பகல்-இரவு இரண்டும் சேர்ந்து தான் இறுக்கும் என்றோம். ஆனால் நிலவு மட்டும் அம்மாவாசை அன்று இரவு என்கிறோமே ? அப்பொழுது நிலவிலும் வேறு இடத்தில் பகல் இருக்காதா? கண்டிப்பாக இறுக்கும். நிலவின் அற்புதமான விஷயம் என்னவென்றால், நிலவு பூமியை சுற்றுவதற்கும் செரியாக 27 நாட்கள் ஆகின்றது. அதனால் நாம் நிலவின் வொரு பகுதியை மட்டுமே எப்பொழுதும் பார்க்கிறோம். அந்த பகுதில் தான் நமது பாட்டி இன்னும் வடை சுட்டு கொண்டிருக்கிறார்கள் :-). அதலால் நாம், தென்படும் பகுதியின் பகலை பவுர்ணமி என்றும் தென்படும் பகுதியின் இரவை அம்மாவாசை என்றும் அழைக்கிறோம்.
நிலவு ஏன் தன்னை தான் சுழலுவதற்கும் பூமியை சுற்றுவதற்கும் ஒன்றுபோல் எடுக்கிறது ?
சூரிய கிரகணம் - சந்திர கிரகணம் - ஆகியவற்றை அறிந்து கொள்ள ....
அடுத்த வாரம் சந்திப்போம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
nice da..I have 2 suggestions..
1) Please correct the spelling mistakes ;)
2) If you add relevant pictures also, It will make more interesting...
just wen i about to comment my points, realized that jk commented same... enoda knowledgekayy naa ivlo spelling mistakes spot panrayn.... hahhaa.. but very much informative bit and keep up the great work..... also, try and put some diagrams that will make yr work easier too ;)
Post a Comment